சீனாவின் 11வது தேசிய மக்கள் பேரவையின் 5வது கூட்டத் தொடரின் செய்தியாளர் கூட்டம் 14ம் நாள் காலையில் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீனத் தலைமையமைச்சர் வென்ச்சியா பாவ் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த போது பேசுகையில், திபெத் உடன்பிறப்புகளின் மத நம்பிக்கைச் சுதந்திரத்துக்கு மதிப்பு அளிப்பதாகவும், அவர்களின் நம்பிக்கை, சீனாவின் சட்டங்களால் பாதுக்காக்கப்படுகிறது என்றும் கூறினார்.
திபெத்தின் பொருளாதாரத்தை வளர்க்கும் போது, திபெத்தின் சுற்றுச்சூழலையும் பண்பாட்டுப் பாரம்பரியத்தையும் பாதுகாப்பதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். திபெத் உடன்பிறப்புகளுக்கு மதிப்பு அளிக்கும் சமத்துவ அரசியல் கொள்கைகளை மேற்கொண்டு, அரசு தன் பணியை இடைவிடாமல் மேம்படுத்தும் என்றும் வென்ச் சியா பாவ் கூறினார்.