• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனத் தலைமையமைச்சர் நடத்திய செய்தியாளர் கூட்டம்
  2012-03-14 17:59:05  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனத் தேசிய மக்கள் பேரவையின் ஆண்டு கூட்டத்தொடர் 14ம் நாள் பெய்சிங் மாநகரில் நிறைவடைந்தது. அதற்குப் பின் சீனத் தலைமையமைச்சர் வென்ச்சியாபாவ் சீன மற்றும் வெளிநாட்டுச் செய்தியாளர்களைச் சந்தித்துரையாடினார். 3 மணி நேர செய்தியாளர் கூட்டத்தில், வென்ச்சியாபாவ் 14 செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். இவ்வாண்டின் அரசுப் பணியறிக்கையில், சீனப் பொருளாதார அதிகரிப்பு வேகத்தின் இலக்கு 7.5 விழுக்காடாக உறுதிப்படுத்தப்பட்டது. கடந்த சில ஆண்டுகள் இது 8 விழுக்காடாக இருந்தது. இது பற்றி வென்ச்சியாபாவ் பேசுகையில், அறிவியல் தொழில் நுட்ப முன்னேற்றம், உழைப்பாளரின் செயல்திறன் உயர்வு ஆகியவற்றைச் சார்ந்து, பொருளாதார அதிகரிப்பை விரைவுபடுத்த வேண்டும் என்று தெரிவித்தார். சீனாவின் மொத்த பொருளாதார அளவு, 47 லட்சம் கோடி யுவானை எட்டும் நிலைமையில், சீனப் பொருளாதார வளர்ச்சி பொது மக்களின் வாழ்க்கைக்கு நன்மை புரியச் செய்வது, இதன் இறுதி நோக்கமாகும் என்றும் அவர் தெரிவித்தார். வென்ச்சியாபாவ் கூறியதாவது:

"சமமற்ற, ஒருங்கிணைப்பற்ற, தொடர்ச்சியற்ற பிரச்சினைகளைக் கையாண்டு, தரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் பாதையில் சீனப் பொருளாதாரம் வளர்ந்து வருவது, உலகப் பொருளாதார வளர்ச்சிக்குத் துணை புரியும். தற்போது, பொருளாதாரத்தின் சீரான, விரைவான வளர்ச்சி, கட்டமைப்பு சீர்படுத்தல், பண வீக்க முன்மதிப்பீட்டு நிர்வாகம் ஆகியவற்றுக்கிடை உறவை செவ்வனே ஒருங்கிணைக்க வேண்டும்" என்றார் அவர்.

இவ்வாண்டு, நடப்பு அரசு ஆட்சி புரியும் இறுதி ஆண்டாகும். பொருளாதாரம் வளர்ந்து, சீர்திருத்தப் போக்கு ஆழமாகி வருவதுடன், தற்போது சீனச் சமூகம் நியாயமற்ற பங்கீடு, நேர்மையின்மை, சீர்க்கேடு மற்றும் ஊழல் உள்ளிட்ட பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றது. இப்பிரச்சினைகளைத் தீர்க்க, பொருளாதார அமைப்பு முறை சீர்திருத்தம் செய்யும் வேளையில், அரசியல் அமைப்பு முறை சீர்திருத்தம் செய்ய வேண்டும். குறிப்பாக, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் நாட்டின் தலைமை அமைப்பு முறையில் சீர்திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று வென்ச்சியாபாவ் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். அவர் கூறியதாவது:

"சீர்திருத்தத்தில் இன்னல்கள் அதிகம். எந்த சீர்திருத்தத்துக்கும், சீன மக்களின் ஆதரவு, ஊக்கம் மற்றும் புத்தாக்க எழுச்சி மிகவும் முக்கியமானவை. 130 கோடி மக்கள் தொகை கொண்டுள்ள சீனாவில், நாட்டின் நடைமுறை நிலைமையைக் கருத்தில் கொண்டு, சோஷலிச ஜனநாயக அரசியலை உருவாக்க வேண்டும். இது எளிது அல்ல. ஆனால், சீர்திருத்தத்தில் முன்னேற்றமடைய வேண்டும். பின்னடைய கூடாது" என்றார் அவர்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040