• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன-அமெரிக்க வர்த்தகம் பற்றிய வென்ச்சியாபாவின் கருத்து
  2012-03-14 11:44:04  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனாவின் 11வது தேசிய மக்கள் பேரவை 5வது கூட்டத் தொடரின் செய்தியாளர் கூட்டம் 14ஆம் நாள் முற்பகல் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீன-அமெரிக்க வர்த்தகத்தின் சமநிலையின்மையை ஒத்துழைப்பு மூலம் தீர்க்க வேண்டும் என்று சீனத் தலைமை அமைச்சர் வென்ச்சியாபாவ் தெரிவித்தார். சீன-அமெரிக்க பொருளாதார மற்றும் வர்த்தக உறவு பற்றிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.

சீன-அமெரிக்க பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்தையும், நிதி மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பையும் மேம்படுத்துவதற்கான ஒட்டுமொத்தத் திட்டம் தொடர்பான முன்மொழிவை வென்ச்சியாபாவ் அளித்தார். அவரது முன்மொழிவுக்கு அமெரிக்க அரசுத் தலைவர் பராக் ஒபாமா முக்கியத்துவம் தந்துள்ளார். இது பற்றி அவர்கள் ஆய்வு செய்துள்ளனர்.

பகைமையை விட ஒத்துழைப்பு நல்லது. சரியான வழிமுறையின்படி முன்னேறினால், சீன-அமெரிக்க பொருளாதார மற்றும் வர்த்தக உறவு சீரான, தொடரவல்ல வளர்ச்சிப் பாதையில் நடைபோடும் என்று வென்ச்சியாபாவ் நம்பிக்கை தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040