சீனச் சுகாதார மற்றும் மருத்துவ மேம்பாட்டு நிதியம் அண்மையில் பெய்ஜிங்கிற்கு 34 நடமாடும் மருத்துவமனைகளை நன்கொடையாக வழங்கியுள்ளது.
இது வரை, இந்நிதியம் மொத்தமாகச் சுமார் 8கோடி யுவானை செலவிட்டு, நடமாடும் மருத்துவமனைகளுக்கான 100 சிறப்பு வாகனங்களை உருவாக்கி நன்கொடை அளித்துள்ளது. அவை சீனாவின் உள் மங்கோலியா, சிங்காய், சின்சியாங், திபெத், யுன்னான், ஹூபேய், பெய்ஜிங் முதலிய மாநிலங்கள் மற்றும் தன்னாட்சிப் பிரதேசங்களில் விவசாயிகள் மற்றும் ஆயர்களுக்குச் சேவையளித்து வருகின்றன. இதுவரை, 3கோடிக்கு அதிகமானோர் இதனால் பயனடைந்துள்ளனர். மொத்தம் 20கோடி யுவானை இச்சேவையால் சிக்கனமாகியிருக்கிறது என்று இவ்வமைப்பின் தலைவர் வான்யேன்பூ குறிப்பிட்டார்.