• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இந்தியாவின் செவ்வாய்க் கிரக ஆராய்ச்சி
  2012-03-19 10:38:04  cri எழுத்தின் அளவு:  A A A   
இந்திய அரசு 2012ம் நிதி ஆண்டில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துக்கு வழங்கும் ஒதுக்கீடு 4432 கோடி ரூபாயை எட்டியது. இது வரலாற்றில் மிக அதிக தொகையாகும். அவற்றில் செவ்வாய்க் கிரக ஆராய்ச்சித் திட்டத்துக்கு 125 கோடி ருபாய் ஒதுக்கப்படுகிறது. இத்துறையில் இந்தியாவின் பெரும் முயற்சியை இதன் மூலம் அறியலாம்.

அரசின் அதிக ஒதுக்கீட்டின் முன்னேற்றத்துடன், செவ்வாய்க் கிரக ஆராய்ச்சித் திட்டம் பன்முகங்களிலும் விரைவாக நடைமுறைக்கு வரும். திட்டப்படி 2016ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை நடத்தப்படிருந்த விண்வெளி கடமைகள் 2013ம் ஆண்டின் நவம்பர் திங்களில் முன்கூட்டியே மேற்கொள்ளப்படும். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் தொடர்புடைய அலுவலர் ஒருவர் இதைத் தெரிவித்தார்.
செவ்வாய்க் கிரக ஆராய்ச்சித் தவிர, இந்தியா, வேறு விண்வெளித் திட்டங்களுக்கான நிதியையும் பெரிதும் அதிகரித்தது. தெற்காசிய பிரதேசத்தின் வழிகாட்டுச் செயற்கைக் கோள் முறைமைக்கு புதிதாக 170 கோடி ருபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளில் இந்தியா விண்வெளித் துறைக்கான ஒதுக்கீட்டை அதிகரித்து வருகிறது. இத்துறை, நவீன அறிவியல் முறைமையில் மிக முக்கிய ஒரு பகுதியாகும். இத்துறையிலான முதலீடு, தொடர்புடைய அறிவியல் தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்தை விரைவுபடுத்தும் என்று இந்தியா கருதுகிறது. அது, ஒரு நாட்டின் பன்நோக்கத் திறனை அடையாளப்படுத்துகிறது. எனவே, இத்துறையில் இந்தியா பின்தங்கியிருக்க விரும்பவில்லை. தவிர, விண்வெளி துறையின் வெற்றி, மக்களின் நம்பிக்கையை ஊக்குவித்து நாட்டின் ஒற்றுமையையும் வலுப்படுத்தும் என்று இந்திய அரசு கருதுகிறது.

விண்வெளித் துறைக்கு வழங்கிய அதிக ஒதுக்கீடு குறித்து, இந்தியாவின் பல்வேறு துறையினர் சிலர் உடன்பாட்டையும் சிலர் எதிர்ப்பையும் தெரிவிக்கின்றனர்.

பல மக்களும் செய்தி ஊடகங்களும் இந்திய அரசின் இத்திட்டத்தை ஏற்றுக்கொள்கின்றனர். விண்வெளி துறையின் சாதனைகள், வலிமையாகி வருகின்ற இந்தியாவின் பன்நோக்கத் திறனின் வெளிப்பாடாகும். அது பெரிதும் வளர்க்கப்பட வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர். அனால், விண்வெளியை விட, இந்தியாவின் சமூகத்தின் பல துறைகளில் மேலதிக ஒதுக்கீடு தேவைப்படுகிறது என்று எதிர்தரப்பில் கூறுகின்றனர்.

எடுத்துக்காட்டாக, மக்களின் வாழ்க்கை, அடிப்படை வசதிகள், கல்வி, மருத்துவச் சிகிச்சை முதலியவற்றை அவர்கள் குறிப்பிடுகின்றனர். விண்வெளித் துறை வழங்கும் ஒதுக்கீட்டை, மக்கள் வாழ்க்கையின் மேம்பாட்டில் பயன்படுத்தப்படுவது மேலும் நல்லது என்று அவர் கருத்து தெரிவித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040