• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
திபெத் நெடுஞ்சாலைக் கட்டுமானத்துக்கு நிதி ஒதுக்கீடு
  2012-03-19 16:17:27  cri எழுத்தின் அளவு:  A A A   
2012ஆம் ஆண்டு, தேசிய மற்றும் மாநில நிலை முக்கிய நெடுஞ்சாலை, கிராமப்புற நெடுஞ்சாலை, எல்லைப் பாதுகாப்பு நெடுஞ்சாலை, கோயில்களுக்குச் செல்லும் நெடுஞ்சாலை ஆகியவற்றின் கட்டுமானத்தை திபெத் தன்னாட்சிப் பிரதேசம் விரைவுப்படுத்தும். நெடுஞ்சாலைக் கட்டுமானத்துக்கான 950 கோடி யுவான் நிதி ஒதுக்கீடு நடைமுறையில் பயன்படுத்தப்படும் என்று இப்பிரதேசத்தின் போக்குவரத்துப் பணியகம் அண்மையில் தெரிவித்துள்ளது.

இவ்வாண்டில், 13 முக்கியத் திட்டப்பணிகள், யாதுங் மாவட்டத்தில் நிகழ்ந்த சீற்றத்துக்குப் பிந்தைய மறு சீரமைப்புத் திட்டப்பணி ஆகியவற்றின் துவக்கத்துக்கு திபெத் போக்குவரத்து வாரியம் முன்னேற்பாட்டுப் பணியை செவ்வனே மேற்கொள்ளும்.

கிராமப்புற நெடுஞ்சாலைக் கட்டுமானத்தில், திபெத்திலுள்ள 411 கிராமங்களில் நெடுஞ்சாலைகளும், 17 வட்டங்களில் தார் சாலைகளும் போக்குவரத்துக்குத் திறக்கப்படும். கோயில்களுக்குச் செல்லும் நெடுஞ்சாலைக் கட்டுமானத்துக்கு 30 கோடி யுவான் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். ஒரே மாதிரியான திபெத் மின்னணு நெடுஞ்சாலை வரைப்படம் வரையப்படும்.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040