இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டுள்ள 16 மாணவர்கள், திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் தொல் பொருள் பணியகத்தின் நேரடி நிர்வாகத்தின் கீழுள்ள தொல் பொருள் பாதுகாப்பு வாரியங்கள் மற்றும் தொடர்புடைய சிறப்புத்துறை நிறுவனங்களைச் சேர்ந்தவர்களாவர். இவர்களில் 15 திபெத் இன மாணவர்களாவர். இப்பயிற்சி, திபெத் சுவர் ஓவியத்தின் வகைகள், கைவினை, சிறப்பியல்பு, நிகழ்வு நிலை ஆகியவற்றை உள்ளடக்கும். தாஷாவ் கோயிலின் சுவர் ஓவிய பாதுகாப்புப் பணியின் நடைமுறையை மாணவர்கள் இப்பயிற்சியில் கற்றுக்கொள்வர்.