இவ்வாண்டு முதல், தேசிய அளவில் இயற்கை வள பாதுகாப்பை வலுப்படுத்துவதை, வாய்ப்பாக கொண்டு, அடுத்த 20 ஆண்டுகளில், இயற்கையான திபெதை உருவாக்க வேண்டும் என்று திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம் அண்மையில் தெரிவித்தது.
2009ம் ஆண்டு, தேசிய இயற்கை சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட்ட பிறகு, நடைபெறும் இன்னொரு முக்கிய நடவடிக்கை, இதுவாகும்.
2010ம் ஆண்டு ஜனவரி திங்களில் சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி நடத்திய திபெத் வளர்ச்சி பணி பற்றிய 5வது கூட்டத்தில், திபெத் இயற்கை சுற்றுச் சூழல் பாதுகாப்பு தேசிய மற்றும் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் பணியின் முக்கிய பகுதியில் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.