உலகப் பொருளாதாரத்தில் ஆசியாவின் முக்கிய பங்கு
2012-03-28 11:41:42 cri எழுத்தின் அளவு: A A A
ஆசிய நாடுகளின் போட்டியாற்றலுக்கான 2012ம் ஆண்டு அறிக்கையை போ ஆவ் ஆசிய கருத்தரங்கு அண்மையில் வெளியிட்டது. ஆசியப் பொருளாதாரத்தின், உலகப் பொருளாதாரத்திலான தகுநிலை மென்மேலும் வலுப்பட்டுள்ளது. உலகப் பொருளாதாரத்தை வளர்த்து உலக பொருளாதார கட்டுக்கோப்பை மாற்றுவதில் அது முக்கிய பங்கு ஆற்றுகிறது என்று இவ்வறிக்கை சுட்டிக்காட்டியது. ஆசியப் பொருளாதாரத்தின் ஒருமைப்பாட்டு அளவு ஆழமாகி வருகிறது. இப்பிரதேசத்துக்குள் வர்த்தகத் தொகையும் வெளிநாட்டு நேரடி முதலீடும் குறிப்பிட்ட அளவில் அதிகரித்தது. சீனா மற்றும் இந்தியாவின் முக்கிய பங்கு இச்சாதனைகளுக்கான முக்கிய காரணமாகும் என்று இவ்வறிக்கை சுட்டிக்காட்டியது. போ ஆவ் ஆசிய கருத்தரங்கின் 2012ம் ஆண்டு கூட்டம் ஏப்ரல் முதல் நாளில் துவங்கவுள்ளது. இக்கூட்டத்தில், ஆசிய நாடுகள் பொருளாதார வளர்ச்சியின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு ஒத்த கருத்துகளை உருவாக்கும்.
தொடர்புடைய செய்திகள்