அமெரிக்க செனெட் அவை வெளியுறவுக் குழு 27ம் நாள் சீனாவின் திபெத் பற்றிய தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது. அமெரிக்காவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், திபெத் பிரச்சினையைப் பயன்படுத்தி, இத்தீர்மானத்தில் சீனாவின் உள் விவகாரத்தில் தலையிடுவதை சீனா உறுதியாக எதிர்ப்பதாக சீன வெளியுறவு அமைச்சின் செய்தித்தொடர்பாளர் ஹெங் லெய் தெரிவித்துள்ளார்.
28ம் நாள் பெய்சிங்கில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் செய்தியாளரின் கேள்விக்குப் பதிலளித்தபோது அவர் இதைத் தெரிவித்தார். அமெரிக்க நாடாளுமன்றத்தின் இந்த உறுப்பினர்கள், உண்மையைத் தெரிந்து கொண்டு, தப்பெண்ணத்தை நீக்கி, எந்த வடிவத்திலும் சீனாவின் உள் விவகாரத்தில் தலையிடுவதை நிறுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
பல்வேறு தேசிய இனங்களின் சட்டப்பூர்வ உரிமைகளையும், மத நம்பிக்கை சுதந்திரத்தையும் பேணிக்காக்க சீனா பாடுபடுகிறது என்றும் அவர் வலியுறுத்தினார்.