• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
திபெத்தின் அடிமைகள் விடுதலை பெற்ற நினைவு நாள்
  2012-03-28 11:25:17  cri எழுத்தின் அளவு:  A A A   
மார்ச் திங்கள் 28ஆம் நாள் சீனாவின் திபெத்திலுள்ள லட்சக்கணக்கான அடிமைகள் விடுதலை பெற்ற நினைவு நாளாகும். 1959ஆம் ஆண்டு மார்ச் திங்கள், அரசியலையும் மதத்தையும் ஒன்றிணைக்கும் நிலப்பிரப்புத்துவ அடிமை அமைப்பு முறையை திபெத் முற்றிலும் நீக்கியது. இன்றைய திபெத்தில் மாபெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

2012ஆம் ஆண்டு, திபெத்தின் லட்சக்கணக்கான அடிமைகள் விடுதலை பெற்ற நினைவு நாளை முன்னிட்டு, திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் தலைவர் பாத்மா திரின்லி ஒலிபரப்பு மற்றும் தொலைக்காட்சி மூலமாக உரை நிகழ்த்தினார். அவர் பேசுகையில், கடந்த 53 ஆண்டுகளில், திபெத்தின் சமூக உற்பத்தி ஆற்றல் மிகப் பெருமளவில் தாராளமயமாக்கப்பட்டு, சமூகம் மற்றும் பொருளாதாரம் பன்முகங்களிலும் வளர்ச்சி அடைந்துள்ளன என்று கூறினார்.

"2011ஆம் ஆண்டு முழுப் பிரதேசத்தின் மொத்த உற்பத்தி மதிப்பு 6058 கோடியே 30 லட்சம் யுவானை எட்டியது. பொது வரவு செலவின் வருமானம் 547 கோடி யுவானை எட்டியது. ஒப்பிடக் கூடிய விலையின்படி, 1959ஆம் ஆண்டில் இருந்ததை போல, இவை முறையே 93.9 மற்றும் 48.5 மடங்காகும்" என்று அவர் கூறினார்.

திபெத்தின் மக்கள் வாழ்க்கை லட்சியமும் பன்முகங்களிலும் முன்னேற்றம் அடைந்துள்ளது. திபெத் மக்களின் நபர்வாரி மதிப்பீட்டு ஆயுள், 1959ஆம் ஆண்டில் இருந்த 35.5 வயதிலிருந்து 67 வயதாக அதிகரித்துள்ளது. அதேவேளை, திபெத்தின் கல்வி மற்றும் சமூகக் காப்புறுதித் துறையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி காணப்பட்டுள்ளது. பாத்மா திரின்லி கூறியதாவது—

"2011ஆம் ஆண்டு திபெத்தைச் சேர்ந்த பட்டதாரிகளில் 99 விழுக்காட்டினர் வேலைவாய்ப்புகளைப் பெற்றுள்ளனர். சமூகக் காப்புறுதி அமைப்பு முறையின் பரவல் நூறு விழுக்காட்டை எட்டியுள்ளது. நவீன கல்வி அமைப்பு முறை பன்முகங்களிலும் உருவாக்கப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார்.

திபெத் மக்களின் அரசியல் உரிமைக்கு பயனுள்ள முறையில் உத்தரவாதம் செய்யப்படுவதோடு, அவர்களின் மத நம்பிக்கைச் சுதந்திரத்துக்கும் மதிப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும், திபெத்தின் தலைசிறந்த பாரம்பரியப் பண்பாடும் பாதுகாக்கப்பட்டு, வளர்க்கப்பட்டுள்ளது. பொட்டாலா மாளிகை, நோர்புலிங்கா, சாகிய கோயில் உள்ளிட்ட தொல் பொருட்கள் மற்றும் வரலாற்றுச் சின்னங்களைப் பழுது பார்த்துப் பாதுகாப்பதற்கு நடுவண் அரசு பெருந்தொகையை நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

திபெத்தின் பின்தங்கிய சக்திகள் பற்றிக் குறிப்பிடுகையில், பாத்மா திரின்லி கூறியதாவது—

"அவர்களின் பிளவு முயற்சி, வரலாறு மற்றும் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டாமல், தோல்வியில் முடியும். பிளவை எதிர்த்து, நாட்டின் ஒருமைப்பாட்டைப் பேணிக்காக்கும் திபெத் மக்களின் வலுவான மன உறுதி மாறப் போவதில்லை" என்று அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040