இந்திய தலைமை அமைச்சர் மன்மோகன் சிங்கின் அழைப்பை ஏற்று, சீன அரசுத் தலைவர் ஹூ ச்சின் தாவ், 28ம் நாள் பிற்பகல் இந்தியாவின் தலைநகர் புதுதில்லிச் சென்றடைந்து, நடைபெற்றவுள்ள பிரிக்ஸ் நாடுகள் தலைவர்களது 4வது உச்சி மாநாட்டில் கலந்துகொள்வார்.
நிதானமான பாதுகாப்பான செழுமையான கூட்டாளியுறவுக்கு பிரிக்ஸ் நாடுகள் பாடுபடுவது என்பது, இந்த உச்சி மாநாட்டின் தலைப்பாகும். உலக நிர்வாகம், தொடரவல்ல வளர்ச்சி, பிரிக்ஸ் நாடுகளின் ஒத்துழைப்பு ஆகிய அம்சங்கள் குறித்து ஹூ ச்சின் தாவ், சீனாவின் கருத்துகளை தெரிவித்து, இதர தலைவர்களுடன் கருத்துகளை பரிமாறுவார். இவ்வுச்சி மாநாட்டுக்குப் பிறகு, தில்லி அறிக்கை வெளியிடப்படும்.
இவ்வுச்சி மாநாட்டின் போது, ஹூச்சின்தாவ் தொடர்புடைய நாடுகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்.