உலக நிதானம், பாதுகாப்பு மற்றும் செழுமை நோக்கிலான கூட்டாளியுறவுக்கு பாடுபடும் பிரிக்ஸ் நாடுகள் என்ற தலைப்பில், இவ்வுச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. உலக நிர்வாகம், பிரிக்ஸ் நாடுகள், தொடரவல்ல வளர்ச்சி ஆகிய அம்சங்கள் பற்றி, அவர்கள் விவாதித்து வருகின்றனர்.
தலைவர்களிடை பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்த பின், பிரிக்ஸ் அமைப்புகளின் ஐந்து உறுப்பு நாடுகள் ஒத்துழைப்பு உடன்படிக்கையில் கையொப்பமிடுவதோடு, பிரிக்ஸ் நாடுகள் பற்றிய ஆய்வு அறிக்கையையும் தில்லி அறிக்கையையும் வெளியிடவுள்ளன.