• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பிரிக்ஸ் நாடுகள் தலைவர்களின் உச்சி மாநாடு
  2012-03-29 10:56:22  cri எழுத்தின் அளவு:  A A A   
BRICS நாடுகள் தலைவர்களின் 4வது உச்சி மாநாட்டில், பொருளாதார, வர்த்தக மற்றும் நிதித் துறை பற்றிய விவாதங்கள் மார்ச் திங்கள் 28ஆம் நாள் முதலில் துவங்கின. தற்போதைய உலகப் பொருளாதார நிலைமையில், BRICS நாடுகள் ஒருங்கிணைப்பையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்தும் வழிகள் பற்றி முக்கியமாக விவாதிக்கப்பட்டுள்ளது. இந்திய வணிக மற்றும் தொழில் துறை அமைச்சர் ஆனந்த் ஷர்மா அன்று நடைபெற்ற பொருளாதார மற்றும் வர்த்தக அமைச்சர்கள் கூட்டத்துக்குப் பின் செய்தியாளரிடம் கூறியதாவது—

"சீனாவின் சான்யா நகரில் நடைபெற்ற உச்சி மாநாட்டுக்குப் பின், பல முக்கிய பிரச்சினைகள் பற்றி கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளும் வாய்ப்பை நடப்புக் கூட்டம் பல்வேறு நாடுகளுக்கும் வழங்குகிறது. பொது அக்கறை உள்ள பிரச்சினைகளை உணர்வுபூர்வமாகப் பரிசீலனை செய்து, தத்தமது கருத்துக்களையும் உளமார பரிமாறிக் கொண்டுள்ளோம்" என்று அவர் கூறினார்.

தற்போதைய உலகப் பொருளாதார நிலைமை, BRICS நாடுகள் உள்ளிட்ட அனைத்து நாடுகளுக்கும் கடுமையான அறைகூவலை ஏற்படுத்தியுள்ளது. BRICS நாடுகள் நெருக்கமாக ஒன்றுபட்டு, வர்த்தகப் பாதுகாப்புவாதத்தைக் கூட்டாக எதிர்த்து, நடைமுறைக்கு ஏற்ற நடவடிக்கைகளின் மூலம் BRICS நாடுகளுக்கிடை வர்த்தகம் மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, உலகப் பொருளாதாரத்தின் மறுமலர்ச்சியைத் தூண்ட வேண்டும் என்று கூட்டத்துக்குப் பின் வெளியிட்ட கூட்டறிக்கையில், இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர்கள் ஒருமனதாக வலியுறுத்தினர். சீன வணிக அமைச்சர் சென்தேமிங் கூறியதாவது—

"ஒத்த கருத்துக்கு வந்துள்ளோம். அதாவது, ஒன்றுக்கு ஒன்று வர்த்தக வசதியை வழங்கி, வர்த்தக ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும். நாணயக் கணக்குத் தீர்ப்பு, மின்னணு இணையதளப் பயன்பாடு, சிறிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கிடை ஒத்துழைப்பு மேடையின் உருவாக்கம் முதலியவை இதில் அடங்கும்" என்று அவர் கூறினார்.

மற்றொரு முக்கிய நிகழ்வான BRICS நாடுகளின் வங்கிகள் கூட்டமைப்பின் ஒத்துழைப்பு அமைப்பு முறையின் 2வது ஆண்டுக் கூட்டம் அதே நாளில் நடைபெற்றது. உலகக் கட்டுப்பாடு, BRICS நாடுகளின் தொடரவல்ல வளர்ச்சி, பசுமைப் பொருளாதாரம் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து, பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் ஆழமான முறையில் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். BRICS நாடுகளின் வங்கிகளுக்கிடை ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது, சர்வதேசப் பொருளாதாரம் மற்றும் நிதி ஒழுங்கைப் பேணிக்காப்பது, சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருளாதார மாதிரியை உருவாக்குவது முதலியவற்றில் அவர்கள் ஒத்த கருத்துக்கு வந்தனர்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040