• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களது 4வது உச்சி மாநாடு
  2012-03-29 19:40:17  cri எழுத்தின் அளவு:  A A A   
தற்போதைய உலக பொருளாதாரத்தில் வளர்ச்சி ஆற்றலுடைய பிரிக்ஸ் என்றழைக்கப்படும் பிரேசில் ரஷியா இந்தியா சீனா தென்னாப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளின் தலைவர்கள், 29ம் நாள் இந்திய தலைநகர் புதுதில்லியில் 4வது உச்சி மாநாட்டை நடத்தினர். நாணயம் பொருளாதாரம் வர்த்தகம் ஆகிய துறைகளில் நடைமுறையாகும் ஒத்துழைப்பு குறித்து பொதுக் கருத்து எட்டப்பட்டுள்ளது. பிரிக்ஸ் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, நீண்டகாலத்தில் அமைதியான செழுமையான உலகத்தை முன்னேற்ற, பாடுபட சீனா விரும்புகிறது என்று சீன அரசுத் தலைவர் ஹூச்சின்தாவ் தெரிவித்தார்.
உள்ளூர் நேரப்படி 29ம் நாள் நண்பகல் ஒரு மணியளவில், பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களது 4வது உச்சி மாநாடு புதுதில்லியிலுள்ள தாஜ் நட்சத்திர விடுதியில் முடிவடைந்தது. 5 நாட்டு தலைவர்கள் வீற்றிருக்க, பிரிக்ஸ் நாடுகளின் வங்கிகளுக்கிடை ஒத்துழைப்பு அமைப்பு முறையை உருவாக்கும் பொது உடன்படிக்கையில் பிரிக்ஸ் நாடுகளின் அலுவலர்கள் கையொப்பமிட்டனர். இவ்வுச்சி மாநாட்டுக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள் மனநிறைவு தெரிவித்தனர். இந்திய தலைமை அமைச்சர் மன்மோகன் சிங் கூறியதாவது,
சர்வதேச நிர்வாகம், தொடரவல்ல வளர்ச்சி ஆகிய அம்சங்கள் குறித்து பேச்சுவார்த்தையை நடத்தினோம். உலக பொருளாதார நிலைமையை மீண்டும் மதிப்பீடு செய்தோம். தவிரவும் அடுத்த ஆண்டில், சில முக்கிய துறைகளில் பிரிக்ஸ் நாடுகளுக்கிடை ஒத்துழைப்பு குறித்து பொதுக் கருத்துக்களை எட்டினோம் என்றார் அவர்.
சீன அரசுத் தலைவர் ஹு சிந்தாவ் மாநாட்டில் உரை நிகழ்த்தினார். தமது உரையில் கூட்டாக வளர்ச்சியடைவதில் ஊன்றி நின்று கூட்டுச் செழுமையை முன்னேற்றுவது, சமநிலை அடிப்படையில் கலந்தாய்வு மேற்கொண்டு ஒன்றுக்கு ஒன்று அரசியல் நம்பிக்கையை ஆழமாக்குவது, பயன்தரும் முறையில் ஒத்துழைத்து ஒத்துழைப்பின் அடிப்படையை வலுப்படுத்துவது, சர்வதேச ஒத்துழைப்பின் மூலம், உலக வளர்ச்சியை முன்னேற்றுவது ஆகிய 4 ஆலோசனைகளை ஹூச்சின்தாவ் தெரிவித்தார்.
பிரிக்ஸ் நாடுகள் ஒவ்வொன்றின் நிலைமை வேறுபட்டது. அவற்றின் வளர்ச்சி முறைகளும் வேறுப்பட்டவை. ஆகையால், ஒன்றின் மேம்பாட்டைக் கொண்டு மற்றதன் குறையை நிரப்பி, கூட்டாக வெற்றி பெறும் ஒத்துழைப்புகளை மேற்கொள்ளலாம். பயன் தரும் கோட்பாட்டைப் பின்பற்றி, பல்வேறு துறைகளிலான ஒத்துழைப்புகளின் பயனை சிறப்பாக வெளிக்கொணர வேண்டும் என்று அவர் கூறினார்.
அதேவைளையில், உலகில் இதர நாடுகளுடன் பரிமாற்றத்தையும் தொடர்பையும் பிரிக்ஸ் நாடுகள் வலுப்படுத்த வேண்டும் என்று ஹு சிந்தாவ் கருத்து தெரிவித்தார். உலகப் பொருளாதாரத் துறையில் சீர்திருத்தத்தையும் மேலாண்மையையும் விரைவுப்படுத்தி, புதிதாக வளர்ந்து வரும் நாடுகள் மற்றும் வளரும் நாடுகளின் பிரதிநிதித்துவ உரிமையையும் கருத்து தெரிவிக்கும் உரிமையையும் அதிகரிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
புள்ளிவிபரங்களின் படி 2011ம் ஆண்டு, சீனாவுக்கும் இதர பிரிக்ஸ் நாடுகளுக்குமிடையிலான மொத்த வர்த்தகத் தொகை 28 ஆயிரத்து 700 கோடி அமெரிக்க டாலராகும். சீனா இந்த நாடுகளின் மிகப் பெரிய வர்த்தக கூட்டாளியாக மாறியுள்ளது. இரு தரப்பு முதலீடும் வேகமாக வளர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040