போ ஆவ் ஆசிய மன்றத்தின் 2012ம் ஆண்டுக் கூட்டம் ஏப்ரல் முதல் நாள் துவங்கி 3ம் நாள் வரை சீனாவின் ஹெய்னான் மாநிலத்தின் போ ஆவ்வில் நடைபெறவுள்ளது. இதுவரை, இக்கூட்டத்திற்கான பாதுகாப்பு, சேவை, செய்தித் தொடர்பு, நலவாழ்வு முதலிய ஆயத்தப் பணிகள் நிறைவேறியுள்ளன.
செய்தி ஊடகளுக்குச் சேவை, வாகனப் பயன்பாடு முதலிய பணிகளின் தொண்டர் சேவையும் ஆயத்தமாக உள்ளது.
தற்போது 1300 படைவீரர்கள் பாதுகாப்புக் கடமையை துவக்கியுள்ளனர்.
130 மருத்துவ ஊழியர்கள் இக்கூட்டத்தின் போது மருத்துவ சிகிச்சை பணியில் ஈடுபடுவர். அவர்களுக்கு முதல் உதவி உள்ளிட்ட பல பயிற்சிகள் வழங்கப்பட்டன. தற்போது மருத்துவ சிகிச்சை வாகனங்களும், மருந்துகளும், பணியாளர்களும் ஆயத்தமாக உள்ளதாக இக்கூட்டத்தின் செயற்குழு தெரிவித்தது.