• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஒத்துழைப்பை முன்னேற்றும் பிரிக்ஸ் நாடுகள் உச்சி மாநாடு
  2012-03-30 10:58:35  cri எழுத்தின் அளவு:  A A A   

பிரிக்ஸ் நாடுகள் 4வது உச்சி மாநாட்டின் தலைவர்கள் பேச்சுவார்த்தை புதுதில்லியில் 29ம் நாள் பிற்பகல் முடிவடைந்தது. நடைமுறைக்கு உகந்த திட்டவட்டமான ஆகிய சொற்களைப் பயன்படுத்தி, பல செய்தி ஊடகங்கள் இவ்வுச்சி மாநாட்டின் வெற்றிகளைத் தொகுத்தன. பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களிடை பேச்சுவார்த்தையில் வகுக்கப்பட்ட திட்டவட்டமான நிகழ்ச்சி நிரல்கள் மென்மேலும் அதிகமாகின. பிரிக்ஸ் நாடுகளிடை திட்டவட்டமான ஒத்துழைப்பு தொடர்பான அம்சங்கள் இவ்வுச்சி மாநாட்டில் விவாதிக்கப்பட்டு, தீர்வு காணப்பட்டு வருகின்றன. அத்துடன், பிரிக்ஸ் நாடுகளிடை ஒத்துழைப்பு, நடைமுறைக்கு ஏற்றதாகவும் நிலையாகவும் வளர்ச்சியடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

பிரிக்ஸ் நாடுகளின் பொருளாதார மற்றும் வர்த்தக அமைச்சர்கள் கூட்டம், பிரிக்ஸ் நாடுகளின் வங்கிக் கூட்டணி ஒத்துழைப்பு முறைமையின் ஆண்டுக் கூட்டம், தொழில் மற்றும் வணிகக் கருத்தரங்கு ஆகியவை கடந்த ஆண்டு சான் யா நகரில் நடைபெற்ற 3வது உச்சி மாநாட்டில் முதல்முறையாக நடத்தப்பட்ட பின்னர், இந்தக் கூட்ட அமைப்புமுறைகள் நடப்பு உச்சி மாநாட்டிலும் தொடர்ந்தன. பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்புப் பிரச்சினைகள் குறித்து, பல்வேறு உறுப்பு நாடுகள் பேச்சுவார்த்தையில் பணித்திட்டம் ஒன்றை உருவாக்கின. மேலும், அடுத்த 5 முதல் 10 ஆண்டுகள் வரை இந்த ஒத்துழைப்பு கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்படுவதும் விபரமாக விவாதிக்கப்பட்டது.

பிரிக்ஸ் நாடுகளைப் பொறுத்த வரை, பொருளாதார வர்த்தக ஒத்துழைப்பு வாய்ந்த முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்த தேவையில்லை. பிரிக்ஸ் நாடுகளிடை வர்த்தகத்தின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. அதன் விளைவாக, பொருளாதரம் புதிதாக விரைவாக வளர்ந்து வருகின்ற இந்நாடுகளின் செல்வாக்கு உலகளவில் விரிவாகி வருகிறது. வர்த்தக ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த, பல்வேறு உறுப்பு நாடுகள் வர்த்தக வசதிகளை மேம்படுத்துவதில் அதிக முயற்சி எடுத்துள்ளன. இணைய வணிக மேடையை அமைப்பது, சுங்க மற்றும் வணிகப் பரிசோதனைக்கு வசதி வழங்குவது உள்ளிட்ட ஆலோசனைகளும் எண்ணங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. சொந்த நாட்டின் நாணயக் கணக்கை அதிகரிக்கும் அதேவேளையில், சொந்த நாணயத்தில் கடன் வழங்கும் வழிமுறைகள் பற்றிய இரு உடன்படிக்கைகளிலும் பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் இப்பேச்சுவார்த்தையில் கையொப்பமிட்டன. முக்கியத்துவம் வாய்ந்த இச்செயல்பாடு, பிரிக்ஸ் நாடுகளிடை பொருளாதார வர்த்தக ஒத்துழைப்பு நிலையை மேலும் உயர்த்தும் என்று பல வெளிநாட்டு செய்தி ஊடகங்கள் கருத்து தெரிவித்தன.

பிரிக்ஸ் நாடுகள் புதியதொரு வளர்ச்சி வங்கியை அமைப்பது என்ற கருத்து, மிக அதிக கவனத்தை ஈர்த்தது. ஆனால், நடப்பு உச்சி மாநாட்டில் இத்தகைய வங்கியை அமைப்பதாக எதுவும் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், தற்போதைய சர்வதேச நாணய அமைப்புமுறையில் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்றும் பிரிக்ஸ் நாடுகளின் பொருளாதார வளர்ச்சி வேகத்துக்கு உகந்த தகுநிலையையும் கருத்து வெளிப்பாட்டு உரிமைகளையும் பெற வேண்டும் என்றும் தில்லி அறிக்கையில் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்டது. தவிர, பிரிக்ஸ் நாடுகள் புதியதொரு வளர்ச்சி வங்கியை அமைப்பது தொடர்பாக ஆய்வு செய்யும் வகையில், ஒரு சிறப்புக் கூட்டுப் பணிக் குழுவை நிறுவுவதென உறுப்பு நாடுகள் முடிவு செய்தன. இப்பணிக்குழுவின் ஆய்வு முடிவுகள் அடுத்த ஆண்டு நடைபெறும் உச்சி மாநாட்டில் விவாதிக்கப்படும் என்று தெரிய வருகிறது.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040