• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
திபெத் பண்பாட்டைப் பரப்பும் இடம்பெயரும் திபெத்தியர்கள்
  2012-03-31 15:48:56  cri எழுத்தின் அளவு:  A A A   

மேன்மேலும் அதிகமான திபெத் மக்கள் நாட்டின் இதர இடங்களுக்குச் சென்று இடம்பெயர்ந்து, நலமாக வாழ்ந்து, வசித்து, கல்வி பயில்கின்றனர் என்று திபெத் மக்களின் இடம்பெயர்வு குறித்த புதிய ஆய்வு அறிக்கை காட்டுகின்றது. இந்தத் திபெத் மக்கள் நவீன நகரங்களில் அங்குள்ள நிலைமைக்கு இணங்கி வாழ்வது மட்டுமல்ல, நாட்டின் இதர நகரங்களிலுள்ள அழகான காட்சியாக அவர்களின் தன்சிறப்புடைய திபெத் பண்பாடு திகழ்கிறது.

திபெத் மக்கள் குடியிருக்க விரும்பும் நகரங்களில், திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தை ஒட்டியமைந்த சிச்சுவான் மாநிலத்தின் செங்து நகரம் முதலிடம் பெறுகிறது. தற்போது,  செங்து நகரத்தில் குடும்ப பதிவு கொண்டுள்ள திபெத் மக்களின் எண்ணிக்கை 30 ஆயிரமாகும். திபெத் தன்னாட்சிப் பிரதேசம் மற்றும் சிச்சுவான் மாநிலத்து பிற திபெத் மக்கள் குவிந்து வாழும் பிரதேசங்களிலிருந்து சுமார் 10 லட்சம் திபெத் மக்கள் ஆண்டுதோறும் செங்து நகரத்திற்கு வருக்கின்றனர். உடை, உணவு, உறைவிடப் பயன்பாடு, போக்குவரத்து வசதிகள் முதலியவற்றில் இடம்பெயர்ந்து வாழும் திபெத் மக்கள் தங்கள் தனிச்சிறப்பை நிலைநிறுத்தி வருகின்றனர். அத்துடன், நகரங்களின் நல்ல இட வமைவைப் பயன்படுத்தி, பல்வேறு இடங்களின் சுற்றுலா பயணிகளையும் பௌத்த மதம் சார் பொருட்களின் சந்தையையும் இணைத்து வர்த்தகம் புரிகின்றனர். இது வெளியுலகத்துடனான தொடர்பை வலுப்படுத்தி, தனிச்சிறப்புடைய திபெத் பண்பாட்டைப் பரப்புவதாகும்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040