போ ஆவ் ஆசிய மன்றத்தின் ஆண்டு கூட்டம் மார்ச் 31ஆம் நாள் மாலை, செயற்குழுக் கூட்டத்தை நடத்தியது. ஜப்பானின் முன்னாள் தலைமை அமைச்சரும் செயற்குழுவின் தலைவருமான யாசோஃபுகுதா இதற்குத் தலைமை தாங்கினார். துணைச் செயற்குழுத் தலைவர் ஜூங்பேயே உள்ளிட்ட 14 ஆளுநர்கள் மற்றும் பிரதிநிதிகள் அக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
அதில், இவ்வாண்டு கூட்டத்தின் ஏற்பாட்டு நிலைமை, 2011ஆம் ஆண்டு செயலகத்தின் பணி மற்றும் 2012ஆம் ஆண்டுக்கான திட்டவரைவு முதலியவற்றைப் பற்றிய அறிக்கைகளைப் பொது செயலாளர் சோவேன்சிவுன் வழங்கினார். போ ஆவ் ஆசிய மன்றத்தின் திட்டத்தின் படி, சீன-ஜப்பான் தொழில் முனைவோரின் பரிமாற்றக் கூட்டம் மற்றும் ஆசிய நிதிக் கூட்டம் 2012ஆம் ஆண்டு ஜப்பானிலும் இந்தியாவிலும் முறையே நடைபெறும். ஆசியா, ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய மூன்று தரப்பின் பேச்சுவார்த்தை சீனாவின் சாங்துங் மாநிலத்தின் ஜூங்தௌ நகரில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.