ஆசியாவின் பல்வேறு நாடுகளுக்கிடையே எரியாற்றல், பண்பாடு, அறிவியல் தொழில்நட்பம், கல்வி முதலிய துறைகளில் பன்முகங்களிலும் ஒத்துழைப்பை ஆழமாக்க வேண்டும். இதனால் இன்னல்களைச் சமாளித்து, சீரான தொடரவல்ல வளர்ச்சிப் பாதையில் வளர முடியும் என்று நம்புவதாக கிலானி கூறினார்.
போ ஆவ் ஆசிய மன்றத்தின் ஆண்டுக்கூட்டத்தில் பாகிஸ்தான் பெரும் கவனம் செலுத்தி வருகிறது. இக்கூட்டத்தில் கலந்து கொள்வதன் மூலம், வளர்ச்சிக்கான உத்திகளை ஆசிய நாடுகளின் தலைவர்கள் இணைந்து திட்டமிட வேண்டுமென்று அவர் விருப்பம் தெரிவித்தார்.