சீனத் துணைத் தலைமையமைச்சர் லீ க்கேச்சியாங் ஹாய்நான் மாநிலத்தின் போ ஆவ்வில் போ ஆவ் ஆசிய மன்றத்தின் 2012ம் ஆண்டுக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் இத்தாலி, பாகிஸ்தான், கசாகஸ்தான் ஆகிய நாடுகளின் தலைமையமைச்சர்களைச் சந்தித்துரையாடினார்.
பாகிஸ்தான் தலைமையமைச்சர் கிலானியைச் சந்தித்து பேசிய போது, இரு நாட்டுறவின் வளர்ச்சிக்குச் சீனா உறுதியாக முயற்சி செய்கிறது என்று லீ க் சியாங் கூறினார். பாகிஸ்தானுடன் நெடுநோக்கு ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி, பயங்கரவாத எதிர்ப்பில் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, இரு நாட்டு நெடுநோக்கு ஒத்துழைப்புக் கூட்டாளி உறவைப் பேணிகாத்து வளர்க்க சீனா விரும்புவதாகவும் லீ க் சியாங் தெரிவித்தார்.
கிலானி பேசுகையில், தைவான், திபெத், சின்சியாங் ஆகியவை பற்றிய பிரச்சினைகளிலும் சீனாவின் நிலைப்பாடுகளை பாகிஸ்தான் உறுதியாக ஆதரிக்கிறது என்றும், பாகிஸ்தானிலுள்ள சீனாவின் நிறுவனங்கள் மற்றும் சீனர்களின் பாதுகாப்பு தொடர்ந்து பேணிகாக்கப்படும் என்றும் தெரிவித்தார்.