உலகம் சரிப்படுத்திச் சீர்திருத்தம் செய்யும் போக்கில், ஆசியாவின் பல்வேறு நாடுகளுடன் இணைந்து, ஒத்தக் கருத்துக்களைத் திரட்டி, முயற்சிகளை மேற்கொண்டு, ஆசியாவின் சீரான தொடரவல்ல வளர்ச்சியைக் கூட்டாக முன்னேற்றச் சீனா விரும்புகிறது என்று சீனத் துணைத் தலைமையமைச்சர் லீக் கே சியாங் ஏப்ரல் திங்கள் 2ம் நாள் சீனாவின் ஹாய்நான் மாநிலத்தின் போ ஆவ் நகரில் கூறினார்.
அவர் போ ஆவ் ஆசிய மன்றத்தின் 2012ம் ஆண்டுக்கூட்டத்தின் துவக்க விழாவில் உரை ஆற்றினார். அவர் கூறுகையில், ஆசியாவில் பல நாடுகளின் வளர்ச்சி நிலை பொதுவாகத் தாழ்ந்து காணப்படுகிறது. இப்பிரதேசத்தில் பல்வேறு நாடுகளுக்கிடையே இடைவெளி இன்னும் வெளிப்படையாக உள்ளது. ஆசியாவின் வளர்ச்சியில், வாய்ப்பும் அறைகூவலும் பின்னிப்பிணைந்து, நம்பிக்கை இன்னல் ஆகிய இரண்டும் ஒரு சேர நிலவுகின்றன என்று அவர் தெரிவித்தார்.
ஆசியாவின் சீரான தொடரவல்ல வளர்ச்சியை முன்னேற்றுவதற்கான ஐந்து முன்மொழிவுகளை லீக் கே சியாங் முன்வைத்தார். ஒன்று, உள் நாட்டுத் தேவையில் காலூன்றி நிற்பது. இரண்டு, திறப்பு மற்றும் சகிப்பு கொள்கையில் ஊன்றி நிற்பது, மூன்று, ஒருவருக்கு ஒருவர் நலம் புரிந்து கூட்டாக வெற்றி பெறுவதை நனவாக்குவது, நான்கு, ஒற்றுமையையும் இணக்கத்தையும் தூண்டுவது, ஐந்து, அமைதி வளர்ச்சியை உறுதியாகப் பின்பற்றுவது ஆகியவையே அந்த முன்மொழிவுகள் ஆகும்.