தொழிற்துறைமயமாக்கம், நகரமயமாக்கம், வேளாண்மை நவீன மயமாக்கம் ஆகியவற்றைக் கூட்டாக விரைவுபடுத்துவது, சீனாவின் நவீனமயமாக்க வழிமுறையாகும் என்று, சீனத் துணைத் தலைமையமைச்சர் லீ க் சியாங் 2ம் நாள் ஹாய்நான் மாநிலத்தில் போ ஆவ்வில் வலியுறுத்தினார். 12வது ஐந்து ஆண்டுத் திட்டக்காலத்திலும் மேலும் நீண்டகால அளவிலும் சீனா பொருளாதாரத்தின் விரைவான வளர்ச்சியை நிலைநிறுத்தி, வளர்ச்சியின் தரத்தையும் பயனையும் இடைவிடாமல் உயர்த்துவதற்கும் இது துணைபுரியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
போ ஆவ் ஆசிய மன்றத்தின் 2012ம் ஆண்டுக்கூட்டத்தின் துவக்க விழாவில் பேசுகையில், நகரமயமாக்கம், சீனாவின் உள்நாட்டுத் தேவையின் மிகப் பெரிய உள்ளார்ந்த ஆற்றலாகத் திகழ்கிறது என்று லீ க் சியாங் சுட்டிக்காட்டினார்.