2011ம் ஆண்டு, வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளின் மூலம், சீனாவின் 12 இலட்சத்து 20 ஆயிரத்துக்குக் கூடுதலான மாற்றுத் திறனுடைய வறியோர் வறுமையிலிருந்து விடுபட்டுள்ளனர். 20 இலட்சத்துக்கும் மேலான மாற்று திறனுடைய வறியோர் உதவிகளைப் பெற்றுள்ளனர் என்று சீன மாற்று திறனுடையோர் அமைப்பு அண்மையில் வெளியிட்டுள்ள 2011ம் ஆண்டு சீன மாற்று திறனுடையோர் இலட்சிய வளர்ச்சிப் புள்ளிவிபரக் கூட்டறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
கடந்த ஆண்டு, சீன மாற்று திறனுடையோர் வறுமை ஒழிப்புப் பணி, குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைக் கண்டுள்ளது. அவர்களின் உற்பத்தித் திறன் மற்றும் வாழ்க்கையின் நிலைமை மேலும் மேம்பட்டுள்ளது. மாற்று திறனுடையோருக்கு உதவியளிக்கும் 3985 தளங்கள் கட்டியமைக்கப்பட்டுள்ளன. 87 ஆயிரம் மாற்று திறனுடையோர் வேலை வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர் என்று இக்கூட்டறிக்கை சுட்டிக்காட்டுகிறது.