இவ்வாண்டு முதல் காலாண்டில், சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு சுமார் 8.4 விழுகாடாக அதிகரித்துள்ளது. நுகர்வு விலைக் குறியீடு 3.5 விழுகாடு அதிகமாகும். இவ்வாண்டின் சீனாவின் பொருளாதாரத் தொடக்கம் சீராக இருக்கிறது என்பதை இது காட்டுகிறது என்று சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் துணைத் தலைவர் சாங் சியௌ சியாங் 3ம் நாள் போ ஆவ் ஆசிய மன்றத்தின் ஆண்டுக்கூட்டத்தில் தெரிவித்தார்.
2012ம் ஆண்டின் உலகப் பொருளாதாரத்தை முன்நோக்கிப் பார்ப்பது என்ற விவாதக் கூட்டத்தில் பேசிய போது அவர் இவ்வாறு கூறினார். இவ்வாண்டின் சீன அரசுப் பணியறிக்கையில் திட்டமிடப்பட்ட பொருளாதார வளர்ச்சிக் குறிக்கோளை நிறைவேற்றும் வகையில், பெரும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று சாங் சியௌ சியாங் கூறினார்.
இவ்வாண்டு, ஆக்கமுள்ள நிதி கொள்கையையும், நிதானமான நாணயக் கொள்கையையும் சீனா தொடர்ந்து நடைமுறைப்படுத்தும் என்று அவர் தெரிவித்தார்.