• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
லீக்கேச்சியாங்கின் உரை பற்றிய வல்லுநரி்ன் விளக்கம்
  2012-04-03 18:34:59  cri எழுத்தின் அளவு:  A A A   
போ ஆவ் ஆசிய மன்றத்தின் 2012ஆம் ஆண்டுக் கூட்டம் 2ஆம் நாள் ஹாய்நான் மாநிலத்தின் போ ஆவ்வில் துவங்கிய போது, சீனத் துணைத் தலைமை அமைச்சர் லீக்கேச்சியாங் உரை நிகழ்த்தினார். சீன நவீன சர்வதேச உறவு ஆய்வுக் கழகத்தின் உலகப் பொருளாதார ஆய்வகத்தின் தலைவர் சென்ஃபெங்யிங் அம்மையார் இவ்வுரை பற்றி விளக்கிக் கூறினார். உலகமயமாக்கத்தில் சீனா ஆசியாவுடன் இணைந்தும், ஆசியா உலகத்துடன் இணைந்தும் கூட்டு வளமடைந்து வருகின்றன என்று சீனத் துணைத் தலைமை அமைச்சர் லீக்கேச்சியாங் தனது உரையில் வலியுறுத்தியதாக அவர் கருத்துத் தெரிவித்தார்.

"உலகமயமாக்க உறவில், ஆசிய நாடுகள் மாபெரும் வளர்ச்சி அடைந்து வருகின்றன. உலகப் பொருளாதார நெருக்கடியின் போது, ஆசியா தான் உலகப் பொருளாதார வளர்ச்சியை மிக விரைவாகத் தூண்டுகிறது. ஆசியாவில், உலகப் பொருளாதாரத்தின் மறுமலர்ச்சிக்கு வழிகாட்டி, உலகப் பொருளாதாரம் சீராக தொடர்ச்சியாக வளர்ச்சி அடையச் செய்யும் ஆற்றல் மிக வலுவாக உள்ளது. ஆசிய-உலக உறவும், சீன-ஆசிய உறவும் கூட்டாகச் செழுமை அடைந்து, கூட்டாக நிலவுகின்றன" என்று சென்ஃபெங்யிங் அம்மையார் கூறினார்.

சீனாவின் உள்நாட்டுத் தேவையின் விரிவாக்கம் திறந்த நிலையில் நடைபெற்று வருகிறது என்று லீக்கேச்சியாங் தெரிவித்தார். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களிடம் சீனா சமமான அணுகு முறையைக் கடைப்பிடிக்கிறது. வெளிப்படையான, சமமான நிலையில் போட்டியிடக் கூடிய சந்தைச் சூழ்நிலை மற்றும் சட்ட ஒழுங்கை உருவாக்குவது, அறிவுச்சார் சொத்துரிமைப் பாதுகாப்பு அளவை வலுப்படுத்துவது, பல்வகைத் தொழில் நிறுவனங்கள் புத்தாக்க மற்றும் அமைப்பு முறை மாற்றத்தில் கூட்டு வளர்ச்சி அடையச் செய்வது ஆகியவற்றில் சீனா முயற்சி மேற்கொண்டு வருகிறது என்று லீக்கேச்சியாங் கூறினார். சீனத் துணைத் தலைமை அமைச்சரின் இந்த உரை, பல துறைகளுக்கு நம்பிக்கையைத் தருகிறது என்று சென்ஃபெங்யிங் அம்மையார் கருத்துத் தெரிவித்தார்.

"துணைத் தலைமை அமைச்சர் லிக்கேச்சியாங்கின் உரை, சந்தைக்கு பெரும் நம்பிக்கையைத் தருகிறது. சீனப் பொருளாதாரம் தீவிரமாக ஒரு நிலைப்படும் சாத்தியக்கூறு மிகக் குறைவு. ஏனென்றால், சீனப் பொருளாதாரத்தின் அடிப்பைடையில் பெரும் மாற்றம் ஏற்படவில்லை. அவர் நம்பிக்கையை உறுதிப்படுத்துகிறார். தொழிற்துறை மயமாக்கம், நகரமயமாக்கம், வேளாண்துறையின் நவீனமயமாக்கம் ஆகியவை மாறவில்லை. எதிர்காலத்தில் சீனப் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டும் முக்கிய இலக்குகளாக அவை திகழ்கின்றன. சீனாவுக்கும் உலகிற்கும் இது பெரும் நம்பிக்கையை அளிக்கிறது. சீனாவில் வளர்ச்சி வாய்ப்பு நிலவுகிறது. சீனப் பொருளாதார வளர்ச்சியின் வழிமுறை மாற்றம மற்றும் தொடரவல்ல வளர்ச்சி, உலகிற்கு மேலும் புதிய நம்பிக்கையை வழங்குகிறது" என்று சென்ஃபெங்யிங் அம்மையார் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040