உலகப் பொருளாதாரம் உறுதியற்ற நிலைமையில் இருக்கும் போது, ஆசிய நாடுகள் முதலில் தங்களது பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு, முன்முயற்சியுடன் சீர்திருத்தத்தை மேற்கொண்டு, ஆசிய வாய்ப்புகளை மேலும் செல்வனே பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று போ ஆவ் ஆசிய மன்றத்தின் துணைத் தலைமை ஆளுனர் ச்செங்ஃபெய்யான் 3ஆம் நாள் கூறினார்.
ஆசிய நாடுகள், பாரம்பரிய வளர்ச்சி வழிமுறையை மீண்டும் ஆய்வு செய்து, வளர்ச்சி நெடுநோக்குத் திட்டம் மற்றும் சிந்தனையைச் சரிப்படுத்த வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
வளர்ச்சி வழிமுறையை மாற்றி, பொருளாதாரக் கட்டமைப்பைச் சரிப்படுத்தும் போக்கில், ஆசிய நாடுகள் ஒற்றுமையை வலுப்படுத்தி, பிரதேசப் பொருளாதார ஒத்துழைப்பை ஆழமாக்க வேண்டும். மேலும், உலகப் பொருளாதாரக் கட்டுப்பாட்டு அமைப்பு முறையின் கட்டுமானத்தில் ஆசிய நாடுகள் ஆக்கமுடன் பங்கெடுத்து, ஆசியாவின் பொதுத் தேவையை உரிய முறையில் வெளிப்படுத்தி, பிரதேசப் பொருளாதார வளர்ச்சிக்கு நல்ல வெளிப்புறச் சூழலை உருவாக்க வேண்டும் என்றும் ச்செங்ஃபெய்யான் குறிப்பிட்டார்.