• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
போ ஆவ் ஆசிய மன்றம் ஆற்றிய முக்கிய பங்குகள்
  2012-04-04 17:07:42  cri எழுத்தின் அளவு:  A A A   

போ ஆவ் ஆசிய மன்றத்தின் 2012ஆம் ஆண்டுக் கூட்டம் ஏப்ரல் திங்கள் 3ஆம் நாள் சீனாவின் ஹாய்நான் மாநிலத்தில் நிறைவடைந்தது. உலகின் பல்வேறு இடங்களைச் சேர்ந்த 2000க்கு மேற்பட்ட பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் சுறுசுறுப்பான ஆழ்ந்த கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். பல நடைமுறை முக்கியத்துவம் கொண்ட கருத்துக்கள் ஏற்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பொருளாதார வளர்ச்சி மாற்றத் துறையில், ஒத்தக் கருத்துக்களை இப்பிரதிநிதிகள் எட்டியுள்ளனர். இது ஆசிய நாடுகளின் வளர்ச்சிக்குத் தெம்பு ஊட்டுவதாகும்.

ஆசியாவின் சீரான தொடரவல்ல வளர்ச்சியை முன்னேற்றுவதற்கான ஐந்து முன்மொழிவுகளைச் சீனத் துணைத் தலைமையமைச்சர் லீக் கே சியாங் முன்வைத்தார். உள் நாட்டுத் தேவை, திறப்பு மற்றும் சகிப்புக் கொள்கை, ஒருவருக்கு ஒருவர் நலம் புரிந்து கூட்டாக வெற்றி பெறுவது, ஒற்றுமையும் இணக்கமும், அமைதி வளர்ச்சி ஆகியவை அந்த முன்மொழிவுகள் ஆகும். வளர்ச்சிப் பிரச்சினையில் சீனாவின் நிலைப்பாட்டை அந்த முன்மொழிவுகள் காட்டுவது மட்டுமல்லாமல், வளர்ச்சிப் பிரச்சினையைத் தீர்க்கும் கருத்துக்களையும் முன்வைத்தன. அதாவது, மாற்றத்தை விரைவுபடுத்துவது முக்கியமாகும். மக்கள் வாழ்க்கையை மேம்படுத்துவது அடிப்படையாகும். புத்தாக்கத்தைச் சீர்திருத்தம் செய்வது உந்து ஆற்றலாகும். சீனாவின் பொறுப்பை லீக் கே சியாங்கின் உரை எடுத்துக்காட்டி, பயன் தரும் திசையை நோக்கி போ ஆவ் ஆசிய மன்றம் வளர்வதை முன்னேற்றும் என்று சீனச் சர்வதேச ஆய்வு நிதியத்தின் ஆசிய-பசிபிக் ஆய்வு மையத்தின் ஆய்வாளர் ஷென் ஷி ஷுன் சுட்டிக்காட்டினார். அவர் மேலும் கூறியதாவது

பல்வேறு துறைகளில் பல பிரச்சினைகளை அறிந்து கொள்வதை லீக் கே சியாங்கின் உரையும் முன்மொழிவுகளும் காட்டின. சீர்திருத்தத்தை ஆழமாக்கும் நிலைமையில், தொழிற்துறை மயமாக்கம், நகர மயமாக்கம், வேளாண்மை நவீனமயமாக்கம் ஆகியவை, மேலும் செவ்வனே மேற்கொள்ளப்பட வேண்டும். உண்மையில், எதிர்காலத்தின் போ ஆவ் ஆசிய மன்றத்தின் வளர்ச்சித் திசையை லீக் கே சியாங்கின் உரை காட்டுகிறது என்று shen shi shun கூறினார்.

கடந்த 10 ஆண்டுகளில், ஆசியப் பிரதேசங்களின் பொருளாதாரச் சரிப்படுத்தலை மேம்படுத்துவது, தமது வளர்ச்சி இலக்குகளை ஆசிய நாடுகள் நனவாக்குவதை முன்னேற்றுவது ஆகியவற்றில், போ ஆவ் ஆசிய மன்றம் பங்காற்றியுள்ளது. தற்போது, போ ஆவ் ஆசிய மன்றத்தின் அடுத்த 10 ஆண்டுகள் துவங்கியுள்ளது. shen shi shun மேலும் கூறியதாவது

அடுத்த 10 ஆண்டுகளில், போ ஆவ் ஆசிய மன்றம் மேலும் பெரும் பங்காற்ற வேண்டும் என்று விருப்பம் தெரிவிக்கின்றோம். கடந்த 10 ஆண்டுகளின் அனுபவங்களையும் படிப்பினைகளையும் தொகுத்துக் கூற வேண்டும். அடுத்த 10 ஆண்டுகளில், போ ஆவ் ஆசிய மன்றம் ஆசியப் பொருளாதார வளர்ச்சியை முன்னேற்றுவதில், முக்கிய பங்காற்றும் என்று அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040