பதிவு செய்த கோயில்கள் மற்றும் மத நடவடிக்கைகள் நடைபெறும் இடங்களுக்கு சாலைப் போக்குவரத்து வசதி செய்யப்பட வருகிறது. இவ்வாறு அந்த இடங்களுக்கு அடிப்படை போக்குவரத்து வசதிகளை, திபெத் மேம்படுத்தும் என்று சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் போக்குவரத்து அலுவலகம் கூறியது.
12வது ஐந்து ஆண்டுத்திட்டக் காலத்தில், கோயில்கள் மற்றும் மத நடவடிக்கைகள் நடைபெறும் இடங்களுக்கு அடிப்படை போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதில், 150கோடி யுவானை ஒதுக்கீடு செய்யப்படும். திபெத் முழுவதிலும் 70விழுக்காட்டுக்கு மேலாக உள்ள இது மாதிரியான இடங்களுக்குச் சாலைப் போக்குவரத்தை நனவாக்க, திபெத் திட்டமிடுள்ளது. 2016ஆம் முதல் 2020ஆம் ஆண்டு வரை, அனைத்து கோயில்களுக்கும் சாலைப் போக்குவரத்தை அளிக்க திபெத் பாடுபடயிருப்பது குறிப்பிடத்தக்கது.