திபெத்தின் அலி பிரதேசத்தில் ஆசியாவில் முதலாவது உலக நிலை வானியல் கண்காணிப்பு நிலையம் அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீனப் பெருநிலப்பகுதி, தைவான், ஜப்பான், தென் கொரியா ஆகியவற்றிலிருந்து வரும் வானியலாளர்கள் இணைந்து இங்கே மாபெரும் தொலைநோக்கிச் சாதனங்களை அமைத்து, வானியல் கண்காணிப்பு ஆய்வு செய்வர் என்று சீன அறிவியல் கழகத்தின் தேசிய வானியல் நிலையம் ஏப்ரல் 12ஆம் நாள் தெரிவித்தது.
அமைக்கப்பட இருக்கும் அலி வானியல் கண்காணிப்பு நிலையம், பூகோளத்தின் வட பகுதியில் கடல் மட்டத்திலிருந்து 5000 மீட்டருக்கு மேல் உயரதிலிருந்து செயல்படும் மதலாவது வானியல் கண்காணிப்பு நிலையமாக இருக்கும்.