திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் கிராமப்புறக் குடிநீர் பாதுகாப்பு பற்றிய திட்டப்பணி துவக்க விழா ஏப்ரல் 10ஆம் நாள் லாசா நகரத்தில் நடைபெற்றது.
கிராமப்புற மக்களின் குடிநீர், மின்சாரம், வெள்ளத்தடுப்பு, பாசனம் முதலான பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு, மக்களின் உற்பத்தி மற்றும் வாழ்க்கை நிலைமையை மேம்படுத்துவதற்காகத், திபெத் தன்னாட்சிப் பிரதேச அரசு, இவ்வாண்டு பிப்ரவரி 28ஆம் நாள் கிராமப்புற நீர் சேமிப்புத் திட்டப்பணியைத் துவக்கியது. இவ்வாண்டு, குடிநீர் பாதுகாப்பு திட்டப்பணியை கிராமப்புறங்களில் வழங்கப்பட நிறைவேற்றி, 2013ஆம் ஆண்டுக்குள், இப்பிரச்சினையைப் பன்முகங்களிலும் தீர்க்கும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.