12வது ஐந்தாண்டுத் திட்டக் காலத்துக்கான வறுமை ஒழிப்பு வளர்ச்சித் திட்டத்தை திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் அரசு அண்மையில் உறுதிப்படுத்தியது. ஐந்து வறுமைப் பிரதேசங்கள் வறுமை ஒழிப்பு வளர்ச்சியின் முக்கியப் பிரதேசங்களாகும். திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் வறுமை ஒழிப்புப் பணியின் மொத்த முதலீ்ட்டுத் தொகை, 400 கோடி யுவானாகும் என்று சீனத் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் வறுமை ஒழிப்புப் பிரிவு 19ம் நாள் தெரிவித்துள்ளது.
வறுமைப் பிரதேசங்களில் சிறப்புத்தொழில்களை வளர்ப்பது, வறிய மக்களின் வருமானத்தைத் திபெத் அதிகரிக்கும் முக்கிய வழிமுறையாகும். சிறப்பு வளர்ப்பு தொழில், வேளாண்மை மற்றும் கால்நடை உற்பத்திப் பதனீடு, வணிக ஏற்றியிறக்கல், கட்டிடப் பொருள், சுற்றுலா சேவை, சிறப்புப் பண்பாடு, தேசிய இனக் கைவினை முதலிய சிறப்புத் தொழிற்துறைகளின் மூலம், விவசாயிகள் மற்றும் ஆயர்களின் வருமானத்தை அது அதிகரித்துள்ளது. 2015ம் ஆண்டு, வறுமை ஒழிப்பு மக்களின் உணவு, உடைப் பிரச்சினையைத் தீர்த்தல் முதலியவற்றை நடைமுறைப்படுத்தத் திபெத் அரசு தீர்மானித்துள்ளது. வறிய மக்கள் வறுமையிலிருந்து விடுபட்டு, செல்வச் செழிப்பு பெறுவதை விரைவில் நனவாக்க இருப்பதாக திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் வறுமை ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.