அடுத்த 3 ஆண்டுகாலத்தில் திபெத் அரசு 311 கோடி யுவானை ஒதுக்கீடு செய்து 13 ஆயிரத்து 385 கிலோமீட்டர் நீளமுள்ள கிராமப்புற நெடுஞ்சாலைகளைக் கட்டியமைக்கும். அதன் காரணமாக 669 கிராமங்களின் நெடுஞ்சாலைப் பிரச்சினை தீர்க்கப்படும். அது, திபெத் விவசாயிகள் மற்றும் ஆயர்களுக்கு வசதியான பாதுகாப்பான போக்குவரத்து நிலையை உருவாக்கும் என்று திபெத் போக்குவரத்து வாரியத்திலிருந்து கிடைத்த தகவல் தெரிவிக்கிறது.
புள்ளிவிபரங்களின்படி, 2011ம் ஆண்டின் அக்டோபர் திங்கள் வரை, திபெத் அரசு மொத்தமாக 1100 கோடி யுவானுக்கு மேலாக ஒதுக்கீடு செய்து 1632 கிராமப்புற நெடுஞ்சாலைக் கட்டுமானத் திட்டப்பணிகளை மேற்கொண்டுள்ளது. மொத்தம் 39 ஆயிரம் கிலோமீட்டர் நீளமுள்ள நெடுஞ்சாலைகளைக் கட்டியமைத்துள்ளது. 2550 கிராமங்களில் அதாவது திபெத்தின் 90 விழுகாட்டு கிராமங்களில் நெடுஞ்சாலைகள் கட்டியமைக்கப்பட்டுள்ளன.