பிரசல்ஸில் பயணம் மேற்கொள்ளும் சீனத் தேசிய மக்கள் பேரவையின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் பிரதிநிதிக் குழு மே 15ஆம் நாள் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் துணைத் தலைவர் ஜார்ஜியோஸ்•பாபாஸ்தாம்கோஸ், பெல்ஜியத்தின் வெளியுறவு அலுவலர்கள் முதலியோரைக் கலந்துரையாடியது.
திபெதின் உயிரினச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, விவசாயிகள் மற்றும் ஆயர்களைக் குடியமர்த்தும் பணி, எதிர்காலத்தின் வளர்ச்சித் திட்டம் முதலியவற்றைப் பற்றி, பிரதிநிதிக் குழுத் தலைவரும் சீனத் தேசிய மக்கள் பேரவையின் பிரதிநிதியுமான சியாங்பா பூன்சோக் கலந்துரையாடலில் கலந்து கொண்டோரின் கேள்விக்குப் பதிலளிக்கையில், அறிமுகப்படுத்தினார்.