12வது ஐந்தாண்டு திட்டக் காலத்துக்குள் திபெத்தில் தேசிய இன கைவினைப் பொருட்களின் மொத்த உற்பத்தி மதிப்பு 100 கோடி யுவானை எட்டக்கூடும். அதற்காக திபெத் தன்னாட்சிப் பிரதேச அரசு தொடர்புடைய திட்டங்களை வகுத்துள்ளது. சுற்றுலாச் சந்தையை முன்னேற்றுவதுடன் பிரதேசத் தனிச்சிறப்பு வாய்ந்த கைவினைப் பொருட்கிளின் உற்பத்தி தளமும் தொழில் நிறுவனங்களும் திபெத்தில் முக்கியமாக வளர்க்கப்படும் என்று தெரிகிறது.தேசிய இனக் கைவினைப் பொருள் துறை வளர்ச்சியை விரைவுப்படுத்தும் கொள்கைகளையும் நடவடிக்கைகளையும் திபெத் அரசு ஆராய்ந்து வகுத்து, இத்துறையில் சிறப்பாக நிதியுதவி வழங்கும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.