7 கோடியே 50 இலட்சம் ஒதுக்கீட்டில் தேஜிலோபு என்ற குழந்தைகளுக்கான முதலாவது பெரிய பூங்கா 24ம் நாள், லாசா நகரில், கட்டப்பட துவங்கியது. அடுத்த ஆண்டு ஜுன் முதல் நாள், உலக குழந்தைகள் நாளின் போது அது திறக்கப்படும் என திட்டமிடப்பட்டுள்ளது.
தேஜிலோபு என்ற திபெத் மொழி சொல்லுக்கு மகிழ்ச்சியான குழந்தை என்று பொருள். இந்த பூங்கா, லாசா ஆற்று கரையில் அமைந்துள்ளது. கட்டிட நிலப்பரப்பு 4200 சதுர மீட்டர். குழந்தைகளுக்கான நவீனமயமான பொழுத்துபோக்கு பூங்காவாக, இது இருக்கும்.
பெய்ஜிங் மாநகர அரசின் உதவியோடு இந்த பூங்கா கட்டப்படுகின்றது.