ஜுன் 9ஆம் நாள், பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வப் பாதுகாப்பு நாளாகும். அப்போது, திபெத்தின் பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வப் பாதுகாப்பு பற்றிய முதலாவது சாதனை கண்காட்சியை திபெத் தன்னாட்சிப் பிரதேசம் லாசா நகரில் நடத்தும். இப்பிரதேசத்தின் பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வப் பாதுகாப்பு மையத்திலிருந்து கிடைத்த தகவல் மூலம் இது தெரிய வருகிறது.
7 நாட்கள் நீடிக்கும் இக்கண்காட்சியில், பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வங்களின் காட்சியும், இத்தகைய மரபுச் செல்வங்களின் வாரிசுகள் மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்களின் அரங்கேற்றங்களும் இடம்பெறும்.
இன்றுவரை, திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தில், சீனத் தேசிய நிலை பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வத் திட்டப்பணிகளின் எண்ணிக்கை 76 ஆகும். தன்னாட்சிப் பிரதேச நிலை பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வங்களின் வாரிசுகள் எண்ணிக்கை 227 ஆகும்.