சீனா, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை முதலிய நாடுகளின் அரசியல், தொழில் நிறுவனங்கள், அறிஞர்கள் மற்றும் ஊடகப் பிரதிந்திகள் சுமார் முந்நூறு பேர் இக்கருத்தரங்கில் கலந்துகொள்கின்றனர்.
இலங்கைக்கு இக்கருத்தரங்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. இரு நாடுகள், குறிப்பாக சீனாவின் தென் மேற்குப் பகுதி இலங்கையுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் முக்கிய மேடையாக அது மாறியுள்ளது என்று சென் து துணை தூதரகத்திற்கான இந்நாட்டின் துணைத் தூதர் சுமுது வலகுலுக செய்தியாளருக்குப் பேட்டியளித்தபோது கூறினார்.