சீனத் திபெத்தில் பயணியர் விமானச் சேவை வளர்ச்சியைத் தூண்டும் உடன்படிக்கையில், சீன பயணியர் விமானச் சேவை பணியகமும், திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் அரசும், 7ஆம் நாள் லாசா நகரில் கையொப்பமிட்டன. லாசா நகரத்திலிருந்து, ஹாங்காங், மக்கௌ, தைவான், தெற்காசியா, மேற்காசியா முதலிய பிரதேசங்கள் மற்றும் நாடுகளுக்குச் செல்லும் விமான வழித்தடங்களை, விமானச் சேவை நிறுவனம் புதிதாகத் துவக்குவதற்கு ஊக்கமளிப்பதாக இரு தரப்பும் தெரிவித்துள்ளன.
தற்போது 6 விமானச் சேவை நிறுவனங்களில் மொத்தம் 32 விமான வழித்தடங்கள் திபெத்திற்குச் செல்கின்றன. அவற்றின் மூலம் 22 நகரங்களுக்குச் செல்லலாம். அவற்றிலுள்ள ஒரு வழியாக, நேபாளத்தின் காட்மாண்டுக்குப் போக முடியும்.