சீனாவின் சிச்சுவான் மற்றும் தெற்காசிய ஒத்துழைப்பு பற்றிய 3வது கலந்தாய்வுக் கூட்டம் ஜுன் 8ம் நாள் சிச்சுவான் மாநிலத்தின் செங்து நகரில் நடைபெற்றது.
இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளத்தேசம், நேபாளம், மாலத் தீவு ஆகிய 7 நாடுகளைச் சேர்ந்த சீனாவுக்கான தூதர்கள், வணிக சங்கங்களின் பொறுப்பாளர்கள், சிச்சுவான் மாநிலம் மற்றும் தெற்காசிய தொழில் முனைவோரின் பிரதிநிதிகள் முதலிய 140க்கு மேற்பட்டோர் இக்கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
சிச்சுவான் மாநிலத்துக்கும் தெற்காசிய நாடுகளுக்கும் இடை ஒத்துழைப்புகளில், நிலஅமைவு மற்றும் போக்குவரத்து போன்ற மேம்பாடுகள் உள்ளன. இரு தரப்பு ஒத்துழைப்புக்கு பெரும் வளர்ச்சி வாய்ப்பும் உள்ளார்ந்த ஆற்றலும் உள்ளன என்று சீன வர்த்தக முன்னேற்றச் சங்கத்தின் துணைத் தலைமைச் செயலாளர் யு சியாவ் துங் குறிப்பிட்டார்.
கூட்டம் முடிந்த பின், சிச்சுவான் மாநிலத்தின் வர்த்தக முன்னேற்றச் சங்கமும் இந்திய தொழில் மற்றும் வணிக சங்கமும் ஒத்துழைப்பு குறிப்பாணை ஒன்றில் கையொப்பமிட்டுள்ளதாக தெரிகிறது.