அண்மையில், சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தில் பயணம் மேற்கொள்ளும் பொற்காலம் வந்துள்ளது. இக்காலத்தில், நாள்தோறும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டுப் பயணிகள் அங்கு பயணம் மேற்கொள்கின்றனர். அமெரிக்கா, ஜெர்மனி, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, ஜப்பான், நேபாளம் முதலிய 40 நாடுகளிலிருந்து வந்துள்ள பயணிகள், அவர்களில் அடங்குகின்றனர் என்று சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசச் சுற்றுலா பணியகம் அறிமுகப்படுத்தியது.
இவ்வாண்டில் ஒரு கோடி பயணிகள் திபெத்தில் பயணம் மேற்கொண்டு, சுற்றுலா வருமானம் ஆயிரத்து இரு நூறு கோடி யுவானை எட்டுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று திபெத் தன்னாட்சிப் பிரதேசச் சுற்றுலா பணியகம் தெரிவித்தது.