திபெத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அரிய பழம்பெரும் நூல்கள்
2012-06-13 10:02:45 cri எழுத்தின் அளவு: A A A
திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் லாசா நகரில் உள்ள நீ மு மாவட்டத்தில் 13 நூற்றாண்டின் அரிய பழம்பெரும் நூல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அண்மையில் லாசா நகரின் பண்பாட்டு அலுவலகத்தின் பணியாளர்கள் இம்மாவட்டத்தில் பழம்பெரும் நூல்களின் கணக்கெடுப்பு நடத்தியபோது இந்நூல்களைக் கண்டுபிடித்தனர். இந்நூல்கள் முழுமையாக இல்லை. அவற்றில் 100க்கு அதிகமான பக்கங்கள் உள்ளன. இந்நூல்களில் பயன்படுத்தப்பட்ட தாள், திபெத் இன மக்கள் பயன்படுத்தும் உயர் தரத் தாளாகும். கறும்பு மையால் எழுதப்பட்ட இந்நூல்கள் அனைத்தும், மருத்துவம், மதம் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெறும் மதமறை நூற்களாகும்.
தொடர்புடைய செய்திகள்