திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தை"சீனாவின் தாங்கா ஓவியக் கலை நகராக" உருவாக்கத் திபெத் அரசு பாடுபட்டு வருவதாக அதன் தொழிற்துறை மற்றும் தகவல் தொழில் நுட்ப அலுவலகத்திலிருந்து இத்தகவல் கிடைத்துள்ளது.
முதலாவது திபெத் இன தாங்கா ஓவியக் கலை வாரிசுகளின் கருத்தரங்கு 12ம் நாள் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் ஒரு கலை மையத்தில் நடைபெற்றது.
1300 ஆண்டுகள் வரலாறுடைய தாங்கா ஓவியக் கலை, வண்ணமயமான பட்டுத்துணியில் வேலைப்பாடுகளுடன் அமையும் மத சார் ஓவியமாகும். இந்த ஓவியங்களை வரைவது மிகவும் சிக்கலானது. தாங்கா, திபெத்தின் தொல்பொருட்களின் செல்வங்களில் முக்கிய பகுதியாகும். இது திபெத்தின் தனிச்சிறப்பு வாய்ந்த சுற்றுலா நினைவுப் பொருட்களில் சிறந்த ஒன்றாகும். இதற்கு பரந்த வணிக வாய்ப்புகள் உண்டு.