லாங் மார்ச் 2-F ஏவுகலன் செலுத்துகின்ற பத்தாவது விண்கலமாக சென்சோ 9 விண்கலம் விண்ணில் செலுத்தப்படும். ஷென்சோ 9 விண்கலத்தை விண்ணில் செலுத்தும் கடமையை இனிதே நிறைவேற்றும் பொருட்டு, சுமார் 30 பிரிவுகளில் இந்த ஏவுக்கலனின் செயல்திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது. Long March 2-F ஏவுக்கலனின் தலைமை வடிவமைப்பாளர் ஜிங் முச்சுன் 13ம் நாள் ஜியு சுவான் செயற்கைக் கோள் ஏவு மையத்தில் இதைத் தெரிவித்தார். அவர் கூறியதாவது:
"தியன் குங்-1 விண்கலம் மற்றும் சென்சோ 8 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்ட பிறகு, இந்த ஏவுக்கலனில் சோதனைப் பணிகள் முழுமையாக நடத்தப்பட்டுள்ளன" என்று அவர் தெரிவித்தார்.
மே திங்கள் 9ம் நாள் செயற்கைக் கோள் ஏவு மையத்திற்கு இந்த ஏவுகலன் அனுப்பப்பட்ட பின், தொழில் நுட்பம் மற்றும் ஏவுதல் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது லாங் மார்ச்-2F ஏவுகலன் சிறந்த செயல் திறனோடு இருக்கிறது என்று ஜிங் முச்சுன் தெரிவித்தார்.