ஜுன் திங்கள் 16ம் நாள் பிற்பகல், 3 விண்வெளி வீரர்களை ஏற்றிச்செல்லும் சென் சோ-9 விண்கலம் விண்ணில் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டு, திட்டமிட்ட சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்துள்ளது. சென் சோ-9 விண்கலம் தியேன் குங்-1 எனும் சீனாவின் முதலாவது விண்வெளி ஆய்வுக் கலத்துடன் 2 முறையாக இணைக்கப்படும்.
"சென்சோ-9 விண்கலம் திட்டமிட்ட சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்துள்ளது" என்று சீனாவின் ஆள்களை ஏற்றிச்செல்லும் விண்வெளி திட்டப்பணியின் தலைமை ஆணையாளர் Chang Wan Quan ச்சயூ ச்சுவான் செயற்கைக் கோள் ஏவு மையத்தில் அறிவித்தார். சீனத் தேசிய மக்கள் பேரவை நிரந்தரக் குழுவின் தலைவர் வூ பாங் கோ சனிக்கிழமை பிற்பகல் ச்சியூ ச்சுவான் செயற்கைக் கோள் ஏவு மையத்தில் இக்கடமையில் ஈடுபடும் ச்சியங் காய் பெங், லியு வாங், லியு யாங் ஆகிய விண்வெளி வீரர்களை வழியனுப்பினார். அவர் கூறியதாவது:
"தியேன் குங்-1 விண்வெளி ஆய்வுக் கலமும் சென் சோ-9 இணைக்கப்படும் கடமை, சீனாவின் ஆட்களை ஏற்றிச்செல்லும் விண்வெளி திட்டப்பணியின் முக்கிய பகுதியாகும். சீனாவின் விண்வெளி தொழில் நுட்பத்தின் முக்கிய பாய்ச்சலும் இதுவாகும்" என்றார் அவர். 3 விண்வெளி வீரர்கள் 10க்கு மேற்பட்ட நாட்களாக விண்வெளியில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அவர்களில் ஒருவர் ஒரு வீராங்கனை அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது. சென் சோ-9 கலத்தின் கடமை பற்றி குறிப்பிடுகையில், பயணத்தில் விண்வெளி வீரர்களின் கட்டுப்பாட்டில் சென் சோ-9 கலமும், தியேன் குங்-1 கலமும் இணைக்கப்படும். மேலும் தொடர்புடைய மருத்துவ ஆய்வுகளை மேற்கொள்ளப்படும் என்று சீனாவின் விண்வெளிப் பயணத் திட்டப்பணியின் துணைத் தலைமை ஆணையாளர் நியூ ஹுங் குவாங் தெரிவித்தார்.