சென் சோ-9, தியேன் குங்-1 ஆகிய விண்கலங்கள் இணைக்கும் கடமைக்குப் பொறுப்பான வாரியங்களின் பிரதிநிதிகளை, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும், சீன தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டியின் தலைவருமான வூ பாங்கோ, 17ஆம் நாள் ஜியு ச்சுவான் செயற்கைக் கோள் ஏவு மையத்தில் அன்புடன் சந்தித்துரையாடினார். சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி, சீன அரசவை, மத்திய ராணுவ ஆணையம், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொது செயலாளர் ஹூ சிந்தாவ் ஆகிய தரப்புகளின் சார்பில், இத்திட்டப்பணியின் தயாரிப்பு, கட்டுமானம், ஆய்வு முதலியவற்றில் ஈடுபடும் பணியாளர்களுக்கு, மனமார்ந்த வணக்கத்தையும், உன்னத மதிப்பையும் அவர் தெரிவித்தார்.
சீனத் தனிச்சிறப்பியல்பு வாய்ந்த சோஷலிச லட்சியத்தின் மாபெரும் வளர்ச்சியை, மனிதரை ஏற்றிச்செல்லும் விண்வெளிப் பயணத் திட்டப்பணி வெளிப்படுத்தியுள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த ஆற்றல் இடைவிடாமல் உயர்வதன் முக்கிய சின்னமாகவும் அது திகழ்கிறது என்று வூ பாங்கோ குறிப்பிட்டார்.