பெய்சிங் நேரப்படி 18ம் நாள் பிற்பகல் 5 மணியளவில், சீன விண்வெளி வீரர் ஜிங் ஹாய் பெங் சீனாவின் முதலாவது விண்வெளி ஆய்வு கூடமான தியேன் குங்-1 விண்வெளி ஆய்வுக் கலத்தின் நுழைவு வாயிலைத் திறந்து, தியேன் குங்-1 விண்வெளி கலத்தில் நுழைந்தார். அதற்குப் பின், விண்வெளி வீரர் லியு வாங் மற்றும் விண்வெளி வீராங்கனை லியு யாங்கும் தியேன் குங்-1 ஆய்வுக் கலத்தில் நுழைந்தனர். அவர்கள் இயல்பாக உள்ளனர். சுற்றுவட்டப் பாதையில் உள்ள விண்வெளிகலத்தில் சீன விண்வெளி வீரர்கள் முதன்முறையாக நுழையும் கடமை இனிதே வெற்றி பெற்றது.
தொடர்ந்து விண்வெளி வீரர்கள் மூவர் தியேன்-குங்-1 விண்வெளி கலத்தில் விண்வெளி அறிவியல் மற்றும் தொழில் நுட்ப ஆய்வுகள் பலவற்றை மேற்கொள்வர்.