சீனத் திபெத்திய அறிஞர்களின் பிரதிநிதிக் குழு ஜெர்மனியின் முனிச் கன்பிஃயூசியஸ் கழகத்தில் 21ம் நாளிரவு இன்றைய திபெத் எனும் பரப்புரைக் கூட்டத்தை நடத்தியது.
கடந்த சில ஆண்டுகளில் சமூக வளர்ச்சி, மக்கள் வாழ்க்கை மேம்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு முதலிய துறைகளில் சீனத் திபெத் தன்னாட்சிப் பிரதேசம் பெற்றுள்ள மாபெரும் முன்னேற்றங்கள், திபெத்தின காவியமான கசர் மன்னர் கதை உள்பட திபெத் இலக்கியம் பற்றிய ஆய்வு முதலிய அம்சங்கள் இக்கூட்டத்தில் எடுத்து கூறப்பட்டன.
அன்று முற்பகல், ஜெர்மனி பாவாரிய மாநில மன்றத்தின் உறுப்பினர் கொன்ரட் கொப்லரை திபெத் பிரதிநிதிக் குழு சந்தித்து பேசியது.