சீன அரசவையின் செய்தி அலுவலகம் உருவாக்கிய சீனத் திபெத் பண்பாட்டுப் பரிமாற்றப் பிரதிநிதி குழு ஜூன் 25ஆம் நாள் ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில் பயணம் மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது. உண்மையான திபெத்தைப் பற்றி ஜெர்மனி மக்கள் அறிந்துக் கொள்வதற்குத் துணைபுரிய, திபெத்தின் சமூகம், பொருளாதாரம் முதலிய துறைகளின் வளர்ச்சியின் புதிய நிலைமைகளைப் பெர்லினிலுள்ள பல்வேறு துறையினர்களுக்கு இக்குழுவினர்கள் அறிமுகப்படுத்துகின்றனர்.
இந்த சீனத் திபெத் பண்பாட்டுப் பரிமாற்றப் பிரதிநிதிக் குழு ஜெர்மனியில் பயணம் மேற்கொள்கின்ற கடைசி இடமாகப் பெர்லின் விளங்குகிறது. இதற்கு முன் ஆஸ்திரியாவில் இக்குழு பயணம் மேற்கொண்டது. பெர்லினுக்குப் பின் இக்குழு தென் ஆப்பிரிக்காவில் பயணம் மேற்கொள்ளும்.