மனிதரை ஏற்றிச் செல்லும் விண்வெளிப் பயணத்துக்குத் தேவைப்படும் மூன்று அடிப்படைத் தொழில் நுட்பங்கள், அதாவது, விண்வெளிக்கும் தரைக்கும் இடையே மனிதரை ஏற்றிச் சென்று வருவது, வீரர்கள் விண்கல வெளிப்பயணம் மேற்கொள்வது, விண்கலங்களை ஒன்றிணைப்பது ஆகிய மூன்று தொழில் நுட்பங்களைச் சீனா கிரகித்துக் கொண்டுள்ளது. சீனாவின் மனிதரை ஏற்றிச் செல்லும் விண்வெளி பயணத் திட்டப்பணி அலுவலகத்தின் தலைவர் வாங் சாவ்யாவ் 29ம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இதைத் தெரிவித்தார்.
மனிதரை ஏற்றிச் செல்லும் விண்வெளிப் பயணத்திலேயே, தற்போதுள்ள உயர் புதிய தொழில் நுட்பங்கள் ஒரு சேர வெளிப்படுத்தப்படுகின்றன. தொலைநோக்கு, அரசியல், அறிவியல் தொழில் நுட்பம், பொருளாதார நலன், திறமைசாலிகளின் பயிற்சி, பண்பாட்டுக் கட்டுமானம் ஆகிய துறைகளில், அது மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்று வாங் சாவ்யாவ் குறிப்பிட்டார்.